2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் அமீரலி தோல்வி ; பள்ளிவாசலில் கண்ணீர்விட்டு அழுதார்

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் எம்.எஸ்.அமீரலி மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

தேர்தல் முடிவுகளின் பின்னர்,மீராவோடை பள்ளிவாசலில் வைத்து அமைச்சர் அமீரலி கண்ணீர் விட்டு அழுதார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எம்.எஸ்.அமீரலி,எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் போட்டியிட்டனர்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  மாத்திரம் 21,585 வாக்குகளைப்பெறு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

பலராலும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமீரலி 15,176 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .