2021 ஜூன் 16, புதன்கிழமை

மட்டக்களப்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உணவு நஞ்சாகியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Super User   / 2010 மார்ச் 25 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  பாடசாலையொன்றில் மாணவர்கள் 112 பேர் பகலுணவு நஞ்சாகியதால் மயக்கமடைந்த நிலையில்    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நன்பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றிய மேலதிக விவரங்கள் வருமாறு.

வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலய மாணவர்களே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையி அவசர வைத்திய சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகலுணவுக்காக சத்துணவை அருந்திய  இம்மாணவர்கள்  வயிற்றுளைவு,வாந்தியெடுத்தல்  ஆகிய நோய்களுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள்  ஆறு வயதிற்கும் பன்னிரண்டு வயதிற்கும் உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மாணவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்,இதுவரை அவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றும்  மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.முருகானந்தம் கூறியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தமிழ்மிரருக்கு தெரிவித்தன.

பொலீஸார் விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .