2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பு பாடசாலையில் உணவு விஷம்; பெண் ஒருவர் கைது

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச பாடசாலையொன்றில்  உணவு விஷமடைந்த சம்பவம் தொடர்பில் பெண்மணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலைக்கு உணவு விநியோகம் செய்யும் பெண்மணியே கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார்.

உணவு விஷமடைந்ததன் காரணமாக, 70 மாணவர்கள் நேற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதில் பெரும்பாலன மாணவர்கள் இன்று காலை வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் நேற்று உணவு விஷமடைந்ததில் 70 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .