2021 மே 13, வியாழக்கிழமை

மாடு குறுக்கிட்டதால் பொலிஸார் வைத்தியசாலையில்

ஹிரான் பிரியங்கர   / 2017 மே 30 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனைமடு உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பயணித்த  ஜீப் வண்டி, ஆனைமடு - நவகத்தேகம வீதியில் பெரியகுளம் பகுதியில், பஸ் மீது மோதி, இன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த 4 பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஆனைமடு பொலிஸார் தெரிவித்தனர்.

ஜீப் வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது,  திடீரென வீதியின் குறுக்காக மாடு சென்றுள்ளது. மாடு மீது மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது, ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக போக்குவரத்துப் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து ஏற்பட்ட ​போது, பஸ்ஸில் பயணிகள் இல்லையென்றும், ஜீப் வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், ஆனைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .