2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மத்துகம பிரதேசத்தில் துப்பாக்கி சூடு;ஒருவர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம பிரதேசத்தில் அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தனவின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாதோரால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவரொட்டிகளை ஒட்டிய பின்னர், குறித்த ஆதரவாளர்கள் மத்துகம விளையாட்டு மைதானத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் சென்ற இரு இனந்தெரியாத  நபர்கள்  இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய லோறன்ஸ் பாஸ்ரின் என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோது, ஏனையோர் தப்பியோடியுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .