2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மத்திய வங்கி அலுவலக உதவியாளரின் சம்பளம் ரூ.188,827

Simrith   / 2024 மார்ச் 06 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் மிகக் குறைந்த தரவரிசையில் பணிபுரியும் அலுவலக உதவியாளரின் தரம் 1க்கான மொத்த சம்பளம் 29.53 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு ரூ.188,827 ஆகவுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.

பிரதி ஆளுநரின் மொத்த சம்பளம் ரூபா 76.97 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது ரூ. 1,728,419 ஆக உயர்ந்துள்ளதாகவும்  SJB பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.  

மேலும் மத்திய வங்கி ஊழியர்களுக்கு வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், நலன்புரிக் கடன்கள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றுக்கும் உரிமை உண்டு என்று பிரதமர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .