2021 ஜூன் 16, புதன்கிழமை

மாத்தறையில் அமைச்சர் லக்ஷ்மன் யாபா - சனத் ஜயசூரிய ஆதரவாளர் மோதல்

Super User   / 2010 ஏப்ரல் 02 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

மாத்தறை நகரில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் சற்று முன் இடம்பெற்ற மோதலில் இரண்டுபேர் காயமடைந்தனர்.

அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன,இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஆகியோரின் ஆதரவாளர்களே மோதலில் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்கள் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

மாத்தறை நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் இவ்விரு வேட்பாளர்களின் பதாதைகளை பொருத்துவதில் எழுந்த தகராறு காரணமாகவே இம்மோதல் மூண்டுள்ளது.

இரவு பத்துமணியளவில் ஆரம்பித்த முறுகல் நிலை நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடித்தது.

சனத் ஜயசூரிய சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்துவிட்டுச்சென்றார் என்று ஒரு சிலரும்,அவர் இன்னும் கிரிக்கெட் ஆட்டத்திற்காக இந்தியாவில் இருக்கின்றார் என்று வேறு சிலரும் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

சனத் ஜயசூரியவிடம் தகவல்களைப்பெறுவதற்காக தமிழ்மிரர் இணையதளம் உடனடியாகத்தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் முடியவில்லை.

அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்.

எனினும்,சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக பொலிஸாரை சுமார் இரண்டு மணிநேரம் வரை வரவேயில்லை என அங்கிருந்தவர்கள் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

நாளை  ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தேர்தல் பிரசாரக்கூட்டம் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .