2021 ஜூன் 19, சனிக்கிழமை

மனோ கணேசனின் ஆதரவாளர் மீது தாக்குதல் : நாளை அஸ்கிரிய மகாநாயக்க தேரோக்களிடம் முறைப்பாடு

Super User   / 2010 மார்ச் 18 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்EXCLUSIVE ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக தொடர்பு கொண்டது.

தற்போது கண்டியில் தங்கியிருக்கும் மனோ கணேசன் தமது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவது குறித்து அஸ்கிரிய மகாநாயக்கா தேரோக்களை சந்தித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

நாளை காலை 9.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் மனோ கணேசன் எம்மிடம் தெரிவித்தார்.

கலஹா என்னுமிடத்தில் வைத்து தன்னுடைய ஆதரவாளர்கள்  எஸ்.பி.திஸாநாயக்காவுடைய கும்பலினால் தாக்கப்பட்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக கலஹா பொலீஸில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும்,தனக்கு பொலீஸில் நம்பிக்கை இல்லையென்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திலும்  பிரதமரிடம் முறையிட்டோம்.எதுவும் நடக்கவில்லை.

அதனால்தான் பௌத்த மதத்தலைவர்களை சந்தித்து முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .