2021 ஜூன் 16, புதன்கிழமை

மயோன் முஸ்தபா பிணையில் விடுதலை

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபாவை இரண்டு பேரின் சரீரப் பிணையில் கொழும்பு நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸாமிலுக்கு,  மயோன் முஸ்தபா 4.2 மில்லியன் ரூபா பணம் கொடுத்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தைக் கூட்டியிருந்தனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவிருப்பதாக மயோன் முஸ்தபா தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .