2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மிருகங்களை பாதுகாக்க வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனவிலங்குப் பாதுகாப்பு வலயங்களினுள் வாகனங்களின் வேகத்தை 50 கிலோமீற்றர் வரைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பகுதிகளில், பஸ்களில் மோதி, காட்டு யானைகள் அதிகளவில் பலியாகின்றமை தொடர்பில், குருநாகல் மாவட்ட செயலகத்தில், அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்தத் தீர்மானம் மோற்கொள்ளப்பட்டுள்ளது.  

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமின ஜயவிக்ரம பெரேராவின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஆனையிறவை உள்ளடக்கி, பொலிஸ் சோதனைச்சாவடிகளை அமைக்க யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .