2021 ஜூன் 14, திங்கட்கிழமை

முழு இரவு பௌத்த சமயப் பிரார்த்தனை

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அனைத்து இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பிரார்த்திக்கும் முழு இரவு பௌத்த சமய வழிபாடும், சுதந்திர சதுக்கத்தில் இன்று (05) மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும்.   

அதிவணக்கத்தக்குரிய தேரர்கள் உள்ளிட்ட ஆயிரம் தேரர்களின் பங்கேற்புடன் இந்த பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.   

இந்த புண்ணிய நிகழ்வில் பங்குபற்றும் பௌத்த துறவியர்கள், கொழும்பு 07, ஆர்.ஜீ, சேனாநாயக்க மாவத்தையிலுள்ள ஸ்ரீ சம்புத்தாலோக்க விகாரையிலிருந்து இன்று மாலை 5 மணியளவில் ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்துக்கு வரவுள்ளனர்.   

இந்த பிரார்த்தனையில் பங்குபற்ற விரும்பும் பக்தர்கள், வெள்ளை ஆடையுடன் மாலை 5 மணிக்கு முன்னதாக சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தருமாறு கேட்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .