2021 ஜூன் 19, சனிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் தொப்பியை அணிந்திருந்த நபர் மீது ஒட்டமாவடியில் அமைச்சர் அமீரலி தாக்குதல்

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அமைச்சர் அமீரலி முஸ்லிம் காங்கிரஸ் தொப்பியை அணிந்திருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அமைச்சரின் ஆதரவாளர்களும் குறிப்பிட்ட நபர் மீது முஸ்லிம் காங்கிரஸ் தொப்பியை கழற்றுமாறு கோரி தாக்குதலை மேற்கொண்டனர் என தமிழ்மிரர் இணையதளத்துக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சற்று முன் தெரிவித்தன.

நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அப்துல் லதீப்(41 வயது) என்ற டிரக்டர் சாரதியே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.தாம் கடந்த ஏழு ஆண்டுகளாக இத்தொப்பியை அணிந்து தொழிலில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட நபர் வாழைச்சேனையில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஒட்டமாவடி நகர சந்தையில் காலை பதினொரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அங்கு குழுமியிருந்த பொலீஸார் தாக்குதல் நடத்தியோரை உடனடியாக அப்புறப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அச்சம் காரணமாக எவரும் குறிப்பிட்ட இந்நபருக்கு உதவ முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை,தமிழ்மிரர் இணையதளம் சற்று முன்னர் அமைச்சர் அமீரலியுடன் தொடர்புகொண்டது.

இச்சம்பவம் குறித்து விசாரித்தபொழுது அதில் உண்மைய் இல்லை என்று அமைச்சர் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .