2021 ஜூன் 21, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.பி மஜீத் அதாவுல்லாவுடன் இணைவு ?

Super User   / 2010 ஏப்ரல் 04 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி எம் முர்ஷிதீன்

EXCLUSIVE ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.மஜீத் விரைவில் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தமிழ்மிரர் இணையதளம் சற்று முன்னர் எஸ்.பி.மஜீதுடன் தொடர்புகொண்டது.
தன்னுடைய வீட்டுக்கு நேற்று அமைச்சர் அதாவுல்லா வந்து சென்றது உண்மைதான்.அதற்காக தான் அக்கட்சியுடன் இணைந்துகொண்டதாக கருத முடியாது என எஸ்.பி.மஜீத் பதிலளித்தார்.

பல அரசியல்வாதிகள் தம்மை வந்து சந்திப்பதாகக்கூறிய அவர் தாம் பொதுத்தேர்தலில் பின்னர் எந்தக்கட்சியில் இணைவது என்பது குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்படாமையே இந்த முடிவுக்கு காரணமா என தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

அதனை ஏற்றுக்கொண்ட எஸ்.பி.மஜீத் தாம் ரவூப் ஹகீம் உள்ள மேடையிலோ அல்லது அதற்கு எதிரான மேடையிலோ ஏறவேண்டிய நிலையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .