2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மு.கா.மன்னார் அமைப்பாளர் மீது தாக்குதல் : ரவூப் ஹகீம் கண்டனம்

Super User   / 2010 மார்ச் 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மன்னாரில் தமது கட்சி அமைப்பாளர் மீது அமைச்சரொருவரின் கையாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேலேயா ரவூப் ஹகீம் தமது கண்டனத்தை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் முன்னணி அமைச்சரொருவரின் கையாட்கள் நடத்திய தாக்குதலில் வர்த்தகரான முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் காயஙளுக்கு இலக்காகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மன்னர் மன்னரில் வர்த்தகர்கள் கடைகலை மூடி கடையடைப்புச்செய்தனர்.ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே இந்த நாட்டில் அவசர காலச்சட்டம் நீடிக்கப்படுகின்றது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் இங்கு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .