2021 ஜூன் 14, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் பத்துக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லும் - ரவூப் ஹகீம்

Super User   / 2010 பெப்ரவரி 25 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான ஆசனங்களைப்பெற்று தன்னுடைய பலத்தை மீண்டும் நிரூபிக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹகீம் தமிழ் மிரர் இணையதளத்துக்கு சற்று முன் அளித்த விசேட பேட்டியில்  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தின் கீழ் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

2000ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில் மரச்சின்னத்தின் கீழ்  போட்டியிட்டு வடக்கு, கிழக்குக்கு வெளியில் முதல்தடவையாக அமோக வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சரத் பொன்சேகா தனித்துப்போட்டியிடுவது குறித்து தமிழ்மிரர் இணையதளம் ரவூப் ஹகீமிடம் வினவியது.

ஜனாதிபதித்தேர்தல் முடிவைத்தொடர்ந்து,விரக்தியடைந்த நிலையில் வெளிநாடு போகவிருந்த ஜெனரல் பொன்சேகாவிடம் அவருக்குரிய பாதுகாப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் மாத்திரமே உள்ளது என்று தாம் ஆலோசனை கூறியதாக ரவூப் ஹகீம் விடையளித்தார்.

பொதுத்தேர்தலில் கூட்டாக போட்டியிடுவதற்கு தாம் பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,கிழக்கு மாகாண அரசியல் குறித்தும் தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.

பல முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இழப்பார்கள் என்று குறிப்பிட்ட ரவூப் ஹகீம், சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டு 5 மாதங்களில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு காரணமாக அமைந்தது என்று பதிலளித்தார்.

  Comments - 0

 • kalaam Friday, 26 February 2010 04:13 PM

  Dear Sir,
  Already you have formed the Fonseka Government by selling Muslims vote. Now again started to tell reminding 2000 that you are going to make the kingdom. Plz. fear of llah. Dont play with the Muslims' ignorance. Perhaps it may be the last breath of you. Hereafter you will join officially as a member of UNP like Ferial Ashraff in SLFP.

  How is it possible to get over 10 Sheets?
  Digamadulla - 01 sure but 02 with very hard fight
  Batticaloa - Not sure. but 01 is very hard.
  Trincomalee - 01 sure. but 02 is very very hard
  Kandy - Not sure your sheet. but 01 is very hard.

  so, very sure only 04 sheets including National List. after a hard endeavor it may be 07 only. hence, 04 out of 07 will cross over to UPFA immediately after the first session of New Parliament. only 03 0f you will remain at your Party. Can you get the promise from your candidates to not to cross over to UPFA?

  Reply : 0       0

  rishad Friday, 26 February 2010 09:20 PM

  how can get 10 seats we expect only 5 seats

  Reply : 0       0

  ubaithullah Saturday, 27 February 2010 07:00 AM

  I was a supporter of SLMC from its inception I am now disappointed the way Mr Rauf Hakeem leading the party to its downfall. he will not definitely get 10 seats

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .