2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மு.கா.தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் ?

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்று கிழக்கிலும் மற்றையது மேல் மாகாணத்திலும் சுழற்சி அடிப்படையில் பகிரப்படும் என தெரியவருகின்றது. 

தற்பொழுது களுத்தறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதிர்காலத்தில் கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கும்  மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கும் பகிரப்படும்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசனலியிடம் தமிழ்மிரர் இணையத்தளம்  வினவியபோது, முதற்கட்டமாக கட்சியின் சிரேஷ்டத்துவம் மற்றும் கட்சிக்கு மிக நம்பிக்கைகுரியவர்கள் என்றடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியின் உயர் பீடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டிக் கொள்ளும் போது தாங்கள் இருவரும் இராஜினாமச் செய்ய தயார்  என்றார் ஹசனலி.    

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தனக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மிக விரைவில் வழங்குவதாக கட்சித் தலமைத்துவம் தனக்கு உறுதியளித்திருப்பதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.(R.A)


  Comments - 0

  • xlntgson Saturday, 24 April 2010 08:28 PM

    உட்கட்சித் தகராறை சமாளிக்க இது ஒரு வழியா? ஜனநாயகத்தையும் மக்கள் வரத்தையும் கேலிக் கூத்தாக்காதீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .