Yuganthini / 2017 மே 21 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை மாற்றம், அவசியமாகத் தேவைப்படுகிறது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவில்லையெனில், அரசாங்கத்தில் இருப்பதை, தமது கட்சி, மீள்பரிசீலனை செய்யுமெனவும் தெரிவித்தார்.
"அமைச்சரவை மாற்றம், அவசியமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் எதிர்பார்த்துக் காத்திருப்பதால், இது, மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago