2021 ஜூன் 16, புதன்கிழமை

யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணை;ஐ.நா வலியுறுத்து

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

25 வருடகால யுத்தத்தின் பின்னர், மனித உரிமை நிலைமைகள்  நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் எனவும்  நவநீதம்பிள்ளை  கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். இந்த யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நாடுகள் உதவி வழங்கும் எனவும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

  Comments - 0

  • koneswaransaro Friday, 05 March 2010 06:20 PM

    Mutpagal cheiyin pitpagal vilaiyum.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .