Freelancer / 2024 மார்ச் 12 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு அமைச்சிற்கு 4,500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்காக புதிய பணியாளர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள். அமைச்சுக்கு இணைத்துக் கொள்ள அங்கீகாரம் பெற்ற பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்கனவே யானை வேலியின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். (a)
11 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
2 hours ago