2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம் அமைக்க இலங்கை அனுமதி

Super User   / 2010 மார்ச் 08 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத்தூதரகத்தின் அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பிரேரணை குறித்து இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கைத்தூதரகத்தின் அலுவலகங்கள் இந்தியாவில் சென்னை,கல்கத்தா,மும்பாய் ஆகிய நகரங்களில்  அமைந்துள்ளன.

இந்தியத்தூதரகத்தின் அலுவலகம் கண்டியில் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் அலுவலகம் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்காது என
 வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம அண்மையில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும்  செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை, இந்திய வெளியுறவுச்செயலாளர் நிருபமா ராவ் இதுகுறித்து ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் வெளிநாட்டு இணையதள தகவல்கள் தெரிவித்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .