2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்தில் ஏழாயிரத்திற்கு மேற்பட்டோர் வருகை - டக்ளஸ்

Super User   / 2010 ஏப்ரல் 03 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என ஈபீடீபீ செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

சுமார் 400 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர் என்று கூறப்படும் செய்திக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுப்புத்தெரிவித்துள்ளார்.

தமது அழைப்புக்காகவே மக்கள் வருகை தந்திருந்தனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் தமிழ்மிரர் இணையதளத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களே வருகை தந்திருந்தனர் எனக்கூறப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .