2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி;வடபகுதியில் அபிவிருத்திக்கு அறைகூவல்

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் சபைகள் உருவாக்கப்பட்டு வடபகுதி அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில், பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச மக்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடபகுதியில் மக்கள் இழந்த அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்படும்  என்பதுடன், விவசாயம், மீன்பிடி போன்ற அனைத்துத் தொழில்களும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இரணைமடுவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு நன்னீரை எடுத்துவருவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துரிதப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என பாகுபாடில்லாது ஒரே கூரையின் கீழ் செயல்படுவது தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .