2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் யுவதி பாலியல் வல்லுறவு;சந்தேக நபர் தப்பியோட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மானிப்பாய் பகுதியில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களில் ஒருவர் நேற்று தப்பியோடியுள்ளார்.

மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் நஞ்சருந்திய நிலையிலும், மற்றையவர் மக்களால் தாக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே, மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார். 

தப்பியோடியவரைத் தேடும் நடவடிக்கையில் யாழ் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குறித்த யுவதி தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக மானிப்பாய் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தவேளை, அங்கு வந்த இருவர் குறித்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் தாம் இராணுவ புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் என கூறியதுடன், குறித்த யுவதியை விசாரணைக்கென்று அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .