2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ்,மாவட்டம் உட்பட வடக்கு,கிழக்கு முழுவதும் ஜேவீபீ யினரின் அரசியல் செயற்பாடுகள் தொடரும் - விஜித ஹேர

Super User   / 2010 ஏப்ரல் 06 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் மக்கள் விடுதலை முன்னணி தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன் தெரிவித்தார்.

அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகமொன்று யாழ் குடாநாட்டில் அக்கட்சியின்  தலைவர் சோமவங்ஸ அமரசிங்ஹவினால் திறந்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்மிரர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட தமது கட்சியின் அலுவலகம் இயங்குவதாகத்தெரிவித்த விஜித ஹேரத் தமது கட்சியின் செயற்பாடுகள் வடக்கு,கிழக்கு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

எனினும்,மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலக திறப்பு விழாவில் எதிர்பார்த்தளவு மக்கள் வருகை தரவில்லையே என தமிழ்மிரர் இணையதளம் வினவியது.

எமது கட்சிக்கு மாத்திரமல்ல,அனைத்துக்கட்சிகளுக்கும் இந்த நிலைதான் என்று விஜித ஹேரத் பதிலளித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .