2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ் ஏழாலையில் தங்க நகைகள் திருட்டு

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் ஏழாலை வடக்கிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த பெண்மணி ஒருவர் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான இந்தப் பெண் யாழ் தென்மராட்சியைச் சொந்த இடமாகவும்,  கண்டியை  வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். 

இது தொடர்பில் குறித்த உறவினர்கள்  யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த  நிலையில், குறித்த பெண் அங்கில்லாதையடுத்து, சுன்னாகம் பொலிஸார் ஓமந்தை பொலிசாருக்கு அறிவித்தனர்.

ஓமந்தை பொலிஸார் குறித்த பெண்மணியை ஓமந்தையில் வைத்து கைதுசெய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .