2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்-டக்ளஸ்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிலுள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் அகற்றப்படும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று உறுதியளித்தார்.

யாழ் குடாநாட்டில் இனிமேல் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவமாட்டாது எனவும்  டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர்  கூறினார்.

தெற்கிலுள்ள மக்களைப் போன்று வடபகுதி மக்களும் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியதாகவும்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அச்சுறுத்தல் காரணமாக உயர் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனினும், தற்போது விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால், படிப்படியாக உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றமுடியும் எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .