2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ் குடாநாட்டில் வெளிநாட்டு பெண்மணி சடலமாக மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் திருமறைக் கலாமன்ற அலுவலகத்தின்  பிற்பகுதியில் வெளிநாட்டு பெண்மணி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டுப் பெண்மணி மின்கம்பியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்திற்கு அருகில் கடிதமொன்று காணப்பட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் குருநகரைச் சேர்ந்த  இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்த இந்தப் பெண்மணி இலங்கைக்கு வந்து 10 நாட்களே ஆகும். குறித்த வெளிநாட்டுப் பெண்மணி சுவீஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .