2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்பு முடிவு

Super User   / 2010 மார்ச் 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் இன்று முற்பகல் 11.15 மணியுடன் தமது வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையை கைவிட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் இன்று தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தன.

மாணவர்களின்  கோரிக்கைகளுக்கு கல்வியமைச்சு இணக்கம் தெரிவித்ததை
அடுத்து வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட்டிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கணிதம் மற்றும் இஸ்லாம் ஆகிய பாடங்களுக்கு விரிவுரையாளர் நியமிக்கப்பட வேண்டும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 16ஆம் திகதி முதல் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இதுவரை காலமும் உப அதிபராக பதவி வகித்த வி.கே.கணபதிப்பிள்ளை அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும்  தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனையடுத்து, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் யாழ் கல்வி வலயத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புதிய அதிபரின் நியமனத்தின் பின்னர், கணித பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்பட்டிருப்பதாக தற்போது கிடைத்த செய்திகள் குறிப்பிடுகின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .