2021 ஜூன் 19, சனிக்கிழமை

இன்று யாழ்.தினக்குரல் உதவி ஆசிரியர் செல்வரட்ணம் ரூபனின் இறுதிக்கிரியைகள்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

 

தினக்குரல் பத்திரிகையின் யாழ்ப்பாண பதிப்புக்கான உதவி ஆசிரியர் செல்வரட்ணம் ரூபன் நேற்று காலமானார்.

இவரது பூதவுடல் இன்று நண்பகல் இரண்டு மணியளவில் வட்டுக்கோட்டை அராலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது  என தமிழ் மிரர் இணையதளத்துக்கு தினக்குரல் ஆசிரியபீடத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

32 வயதான செல்வரட்ணம் ரூபன் இனம் காணப்படாத நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார் என்றும் கூறப்படுகின்றது.

சக்தி தாசன் என்ற பெயரில் ஆக்கங்கள் படைத்த இவர் யாழ் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .