2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்.மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி வீர விருது வழங்கி கௌரவிப்பு

Super User   / 2010 மார்ச் 19 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானிப்பாய் மகளிர் கல்லூரியைச்சேர்ந்த சின்னராசா தனன்ஸிகா என்ற மாணவி தேசிய வீர மாணவர் விருது வழங்கும் வைபவத்தில் தங்க விருது வாங்கி கௌரவிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது  தேசிய வீர மாணவர்களை கௌரவிக்கும் வைபவம் இடம்பெற்றது.

தமது உயிரை மதிக்காமல் ஏனைய மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி,அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் மாணவ,மாணவிகளே இந்த விருதுக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

தனன்ஸிகா என்ற இந்த மாணவி,யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் பதுங்கு குழியொன்ரில் சிக்கிக்கொண்ட பதினொரு வயதான மானவரொருவரை ஷெல் தாக்குதலிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

அத்தோடு,வேறு சிலரையும் காப்பாற்றுவதில் இதுபோல் உதவியிருக்கின்றார்.இந்தத்துணிச்சலான காரியத்துக்காகவே தனன்ஸிகாவுக்கு வீர விருது வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .