2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ரணில் : தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்பு

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தற்போது யாழ்ப்ப்பாணம் வீரசிங்கம் மடபண்த்தில் இடம்பெறும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் இக்கூட்டம் ஆரம்பமானது.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கா உரையாற்றிக்கொண்டிருக்கின்றார் என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முபீன்,குயிலன் மற்றும் கட்சியின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் இதுவரை உரையாற்றியுள்ளனர்.

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நன்பகல் மூன்று மணியளவில் யாழ்.பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டார் என்று யாழ்.செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விகிரமசிங்ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முபீன்,குயிலன் மற்றும் கட்சியின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் இதுவரை உரையாற்றியுள்ளனர்.

ரணில் விகிரமசிங்ஹவின் உரை இன்னும் அரை மணித்தியாலத்தில் இடம்பெறும் என்றும் யாழ்.தகவல்கள் கூறுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .