Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கிண்ண தொடரில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ஓட்டங்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ஓட்டங்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 128 ஓட்டங் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களுடனும், ஷிவம் துபே 10 ஓட்டங்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ஓட்டங்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை (14) ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். மறுபுறம் இந்த போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் கலந்துகொண்ட நிலையில் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா பங்கேற்கவில்லை. இது பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் பரிசளிப்பு நிகழ்வில் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா கலந்து கொள்ளாததற்கான காரணங்களை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் விளக்கியுள்ளார்.
“அது (பரிசளிப்பு நிகழ்வில் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா பங்கேற்காதது) இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததன் விளைவு என்று நான் நினைக்கிறேன். போட்டியின் முடிவில் கைகுலுக்க நாங்கள் ஆர்வமாக இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அதுவே கிட்டத்தட்ட முடிவு. ஆட்டத்தின் முடிவில் கைகுலுக்க நாங்கள் தயாராக இருந்தோம் என்பது தெளிவாகிறது. எங்கள் எதிரணிகள் அவ்வாறு செய்யாததால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். நாங்கள் கைகுலுக்க சென்றோம் ஆனால் அவர்கள் ஏற்கனவே உடை மாற்றும் அறைகளுக்குள் சென்றுவிட்டனர்” என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .