2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி சிறுமி பலி: குழந்தை உட்பட இருவர் காயம்

Gavitha   / 2017 மே 19 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், கல்கிரியகம பகுதியில், யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி, சிறுமியொருவர் உயிரிழந்தள்ளதாகவும் ஒன்றரை வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஐந்து வயது சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார். சிறுமியின் ஒன்றரை வயது தங்கையும் பாட்டியுமே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாட்டியுடன், பாலர் பாடசாலைக்குச் சென்றுக்கொண்டிருந்தவர்கள், யானைத்தாக்குதலுக்கு உள்ளானதாகவும் மூவரும் அன்தியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஐந்து வயது சிறுமி உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .