Editorial / 2024 ஜூன் 02 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கட்சியின் உறுப்புரிமையை வழங்கி,
கட்சியில் மீள இணைத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஞாயிற்றுக்கிழமை (02) தீர்மானித்துள்ளது.
ரஞ்சித் மத்தும பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி 2020 இல் இடைநிறுத்தியது.
எவ்வாறாயினும், கட்சி அங்கத்துவம் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளை தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், ஞாயிற்றுக்கிழமை (02) கூடிய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago