2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வாக்குப்பெட்டிகளின் உள்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப்பெட்டிகளின் உள்புறத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு அரசியல்க் கட்சிகளின் முகவர்கள் மற்றும் சுயாதீனக் குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டுவதன் மூலம் எழும் குற்றச்சாட்டுக்களை தவிர்க்க முடியும் என திருகோணமலை உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.நிஷாந்த தினிபிரிய குறிப்பிட்டார். 

வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் வெறுமையான வாக்குப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பின்னர் சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 
இதேபோன்று, வாக்கெடுப்பு முடிவடைந்து வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னரும் ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் திருகோணமலை உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.நிஷாந்த தினிபிரிய  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .