2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு செயற்கை கால்கள் விநியோகம்;இந்தியா நடவடிக்கை

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக, அவையவங்களை   இழந்த சுமார் 1000 பேருக்கு செயற்கை கால்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவிலிருந்து நேற்றுக் காலை இலங்கைக்கு வந்திருந்த 19 பேரைக் கொண்ட குழு, மெனிக்பாம் முகாமுக்கு சென்றுள்ளனர்.

யுத்தத்தால் கால்களை இழந்தவர்களுக்கு  செயற்கை கால்களை பொருத்தும்  நடவடிக்கையை இன்று முதல்இந்தக் குழு வவுனியாவில் ஆரம்பிக்கும் என அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவினர்  ஒன்டரை மாதகாலம் வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும் அரசாங்க வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .