2021 ஜூன் 16, புதன்கிழமை

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்கிவருவதாக குற்றச்சாட்டு

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டபோதிலும், சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகள் தொடர்வதாக இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பல கப்பல்கள்  சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எம்.ஜெ.சாதீக் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் முதல் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிட முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஏ.எம்.ஜெ.சாதீக்  குறிப்பிட்டார்.

இதன் மூலம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் ஏ.எம்.ஜெ.சாதீக் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .