2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வன்னி நலன்புரி முகாம்களுக்கு பிரதி அமைச்சர் கருணா இன்று விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று வன்னி மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.இத்தகவலை பிரதி அமைச்சர் முரளிதரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து தமது விஜயத்தின் போது ஆராயப்படும் என்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற அமைச்சின் உயர் அதிகாரிகளும் அமைச்சருடன் செல்லவுள்ளனர்.

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது பதவியை பொறுப்பேற்றவுடன் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .