2021 ஜூன் 19, சனிக்கிழமை

வரலாற்றில் முதல்தடவையாக தமிழ் பேசும் ஒரேயொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராக விஜயகலா மகேஸ்வரன்

Super User   / 2010 ஏப்ரல் 22 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE  இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் ஒரேயொரு தமிழ் பேசும் பெண் உறுப்பினராக விஜயகலா மகேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 7100 ஆகும்.

பொதுப்பணிகளிலும்,சமயத்தொண்டு செய்வதிலும் ஈடுபாடு காட்டிவந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு இதுவே முதலாவது அரசியல் பிரவேசமாகும்.

காரை நகர் இந்துக்கல்லூரியில் உயர்கல்வியை மேற்கொண்ட விஜயகலா மகேஸ்வரன் முன்னாள் அமைச்சர் ரி.மகேஸ்வரனின் மனைவியாவார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு ஒரேயொரு தமிழ்ப்பெண் உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Jananayagan Friday, 23 April 2010 08:17 AM

  தமிழ் கூட்டமைப்பு பெண்களை மறந்துவிட்டதோ?

  Reply : 0       0

  Ram Friday, 23 April 2010 01:54 PM

  முர்ஷிதீன், விஜயகலா மகேஸ்வரனுக்கு முன் வேறு ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கவில்லையா? பத்மினி சிதம்பரநாதன், தங்கேஸ்வரி பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?

  Reply : 0       0

  suren Friday, 23 April 2010 02:23 PM

  என்ன Zெசால்ல வாரீங்க....வரலாற்றிலா ்ல்லது யாழ்ப்பாண வரலாற்றிலா ்ல்லது இந்த முைற ெதரிவுZெசய்யப்பட்ட பாராளுமன்றிலா.....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .