2021 ஜூன் 16, புதன்கிழமை

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.

Super User   / 2010 ஏப்ரல் 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மலேஷியாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரபாகரனின் தாயார் உடனடியாக நாடுகடத்தப்பட்டார் என இந்தியப்பொலீஸார் தெரிவித்தனர்.

சென்னையிலிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்காக வருகைதந்த பார்வதி அம்மையார் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னரேயே திருப்பி அனுப்பப்பட்டார் என்றும் பொலீஸார் கூறினர். 

விமான நிலையத்தைச்சுற்றியும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ,தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வருகை தந்திருந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .