2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

10 வருடங்களாக உறவினர்களை சந்திக்க முடியாதுள்ள சிறைக்கைதி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன்)

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பலவானர் ஜெகபாலன் என்பவர் கடந்த 10 வருடங்களாக தனது உறவினர்கள் எவரையும் சந்திக்க முடியுள்ளதாகவும் அவர்களைச் சந்திக்க அனுமதியளிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் மேல் நீதிமன்றத்தில் இன்று கோரினர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேகநபர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவமொன்றின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டவராவார்.

 

 

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் கடந்த 1999ஆம் ஆண்டு ஜா - எல பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டமொன்றின் போது நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது பிரிகேடியர் லக்கி அலுகம கொல்லப்பட்டார்.

இந்நிலையில், குறித்த மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணியின் வாதத்தினை கருத்திற் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ, சந்தேகநபரை தற்காலிகமாகவேனும் இரண்டு வாரக் காலப்பகுதிக்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றும் சாத்தியம் குறித்து ஆராயும்படி அதிகாரிகளைப் பணித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .