2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இராணுவத்திலிருந்து வெளியேறிய 1000 பேர் சரண்

Super User   / 2010 பெப்ரவரி 05 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்திலிருந்து வெளியேறிய 1422 பேர் சரணடைந்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து வெளியோருக்கு சரணடைவதற்காக குறிப்பிட்டதொரு காலப்பகுதி வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியிலேயே இவர்கள் சரணடைந்திருப்பதாக பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

தற்போது முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த 1422 பேரும் அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்பதுடன், இவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாதெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சரணடையாது மறைந்திருக்கும் இராணுவத்திலிருந்து வெளியோர் இராணுவப்
பொலிஸாரால் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் உதய நாணக்கார மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .