S.Renuka / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணி புரிந்த சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, அவரது விளக்கமறியல் காலம் இன்று புதன்கிழமையுடன் (11) நிறைவடைவதால், அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
31 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago