S.Renuka / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வானியல் அதிசயங்களில் ஒன்றான 'வளைய சூரிய கிரகணம்' (Annular Solar Eclipse) எதிர்வரும் 17ஆம் திகதி (மாசி அமாவாசை) நிகழவுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது, அதன் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் பிரகாசமான ஒளிவட்டத்தை உருவாக்குவதால் இது 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும்.
இதன்போது சந்திரனைச் சுற்றி சூரியன் ஒரு தங்க வளையமாகத் தெரியும் இந்த அற்புதமான உச்சக் காட்சியை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணலாம்.
முழு சூரிய கிரகணத்தைப் போல வானம் முற்றிலும் இருளடையாது; பகல் நேர ஒளி மங்கலாகத் தொடர்ந்தே இருக்கும்.
புவியியல் ரீதியாக இந்த கிரகணம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே முழுமையாகத் தெரியும்.
அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா மற்றும் தெற்கு அர்ஜென்டினா பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தென் பெருங்கடலில் பயணிப்பவர்கள் இதனை நேரில் காணலாம்.
தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் சூரியன் பாதியிலேயே மறைந்து, 'கடித்த ஆரஞ்சுப் பழம்' போலக் காட்சியளிக்கும்.
இந்தியாவில் இந்த கிரகணத்தைக் காண முடியாது என்றாலும், வானியல் ரீதியாக இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது, அதே சமயம் அது பூமியிலிருந்து 400 மடங்கு அதிகத் தொலைவிலும் உள்ளது. இந்தத் துல்லியமான விகிதமே சந்திரன் சூரியனைச் சரியாக மறைக்கக் காரணமாகிறது என விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.
47 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026