Janu / 2026 மார்ச் 26 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்பமேளா அழகியாக அனைவராலும் அறியப்பட்ட மோனலிசா தற்போது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றினை கண்ணீருடன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக் ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு 13ம் தேதி ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
சுமார் 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் பாசி, மாலை இவற்றினை விற்றுக்கொண்டிருந்தவர் தான் மோனலிசா. இவரது கண்ணழகு, சிரிப்பு, அழகு பலரையும் கவர்ந்த நிலையில், இவரை வைத்து எடுக்கப்பட்ட செல்பி பயங்கர வைரலாகியது.
ஒரே வீடியோவால் நாடு முழுவதும் பிரபலமாகிய இவரது அழகே ஆபத்தாக மாறியது. மோனலிசாவை சிலர் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததால், தனது சொந்த ஊரான மத்தியபிரதேசம், இந்தூருக்கு திரும்பி சென்றார்.
இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்து முதல் படம் ஒன்றில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது. இவர் முகநூல் மூலமாக முகமது ஃபர்மான் என்ற மு்லீம் இளைஞரை காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு காதலன் வீட்டில் சம்மதம் தெரிவி்க்காத நிலையில், கடந்த வாரம் காதலனை கேரளாவில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் நடிக்கும் முதல் படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக கண்ணீர் மல்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். சனோஜ் இயக்கத்தில் தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தில் மோனலிசா நடித்து வருகின்றார்.
கண்ணீர் மல்க மோனலிசா கூறுகையில், சனோஜ் மிஸ்ரா நல்ல மனிதர் கிடையாது, 10 முறை தன்னை தவறான முறையில் தொட்டார். எனது குடும்பத்தினர் முன்பே இந்த கொடுமை நடந்தது என்றும் அவர்கள் எனக்கு எந்தவொரு ஆதரவும் கொடுக்கவில்லை.
ஏனெனில் இது தனது முதல்படம் என்பதால் கடந்து செல் என்று கூறியதாகவும், தான் பட்ட துன்பங்கள் தனக்கு மட்டுமே தெரியும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
நான் இயக்குனர் மீது புகார் அளிக்க இருந்தேன்.. ஆனால் தனது குடும்பத்தினர் என்னை விடவில்லை... தற்போது எனது திருமணத்தை வைத்து மத ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கின்றார் என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago