2026 மார்ச் 30, திங்கட்கிழமை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை

Freelancer   / 2026 மார்ச் 28 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று (28) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 39°C முதல் 45°C வரை பதிவாகக்கூடும் என அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். 

நிலவும் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .