2026 மார்ச் 30, திங்கட்கிழமை

டெனிம் உடையில் ஸ்டைலிஷ் லுக்

Editorial   / 2026 மார்ச் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான '7G ரெயின்போ காலனி' படத்தின் கன்னட ரீமேக் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய் நடித்த 'தடையற ஒரு தாக்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து கௌதம் கார்த்திக்குடன் 'என்னமோ ஏதோ' படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக மாறிய ரகுல், தமிழில் கார்த்தியுடன் இணைந்து நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தப் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்குப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் கைவசம் படங்கள் இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது 'டெனிம்' உடையில் அதீத பொலிவுடன் இருக்கும் தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருவதோடு, இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டும் வருகிறது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .