Lenin Raj / 2026 மார்ச் 30 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிடுவதற்காக ஒன்றுகூடியிருந்த நான்கு பேர், மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் மீட்டியாகொட பகுதியில் அமைந்துள்ள, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவர் 'கரந்தெனிய சுத்தா' என்பவரது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட (Revolver) துப்பாக்கி ஒன்றும், ஆறு தோட்டாக்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago