2026 மார்ச் 30, திங்கட்கிழமை

திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் தற்போது மேலும் தீவிரமாகி வருகிறது. ஏற்கனவே பல்வேறு வதந்திகள் கிளம்பியிருந்த நிலையில், இப்போது திரிஷா வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கூட அந்த விவாதத்திற்கு புதிய தீனி ஊட்டியுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் குடும்பத்தில் நடந்த திருமண விழாவில், விஜய்யும் திரிஷாவும் மேட்சிங் டிரஸ் ஒரே காரில் வந்து கலந்து கொண்டது பெரும் கவனத்தை ஈர்த்தது. இருவரும் மணமக்களை வாழ்த்தி, ஒன்றாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இதற்கு முன்னரே, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவில் தனது கணவருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்ற தகவல்கள் பரவி வந்தன. அந்த நடிகை யார் என்ற கேள்வியில் பலரும் திரிஷாவையே சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர்.

 

திருமண விழாவில் இருவரும் இணைந்து வந்ததிலிருந்து, "இருவருக்கும் உறவு உறுதி" என்ற பேச்சு பலரிடமும் வலுப்பெற்றது. தேர்தல் முடிந்ததும் இவர்களுக்கு திருமணம் நடக்கலாம் என்ற அளவுக்கு கூட சிலர் கருத்து கூற ஆரம்பித்தனர்.

அதோடு, திரிஷாவின் அம்மா உமா சில ரீல்ஸ்களுக்கு லைக் செய்தது கூட இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து தளங்களிலும் இதே விவாதம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .