2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கைவிடப்பட்ட 13 வயதுச் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (காஞ்சனா குமார அரியதாச)

சுனாமி தாக்கத்தின்போது தனது பெற்றோரை இழந்த 13 வயதுச் சிறுமியொருவர் கைவிடப்பட்ட நிலையில் சிகிரியா பிரதேசவாசிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தான் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின்போது தனது பெற்றோர் உயிரிழந்ததாகவும் குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார். அத்துடன், அவரது இரு சகோதரர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், யுத்தத்தின்போது அவர்கள் காணாமல்ப் போனதாகவும் சிறுமி கூறினார். உறவினர்களுடன்   தங்கியிருந்த நிலையில் அவர்கள் தன்னை சிகிரியாவில் கைவிட்டுச் சென்றதாகவும் குறித்த சிறுமி தெரிவித்தார்.

இச்சிறுமியை சிகிரியாவுக்கு அழைத்து வந்த இளம் பெண்ணை கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த 13 வயதுச் சிறுமி தம்புல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .